கட்டுரைகள் ஒவ்வொன்றும் பத்தரை மாற்றுத் தங்கம்தான்!



உலகளாவிய பக்தர்களைக் கொண்ட உயர்ந்தோங்கிய முருகப்பெருமான் கம்பீரமாய் வீற்றிருந்து அருள்தரும் மனம் கவர் மலேசியா நாட்டின் பத்து மலை முருகன் ஆலயத்தின் மகத்துவங்களை விவரித்த கட்டுரை திகைப்பில் ஆழ்த்தி விட்டது.
- த.சத்திய நாராயணன், அயன்புரம்.

எத்தனை எத்தனை காவடிகள்! அத்தனையும் பக்தர்களின் துயர் துடைக்க உருவான தென்பதை அறிந்தேன். சிலிர்த்தேன். வேலவனால் வேதனையும், சோதனையும் விலகுமென்பது இதனால்தானோ? பங்குனி உத்திர திருநாளின் சிறப்பு, துர்முகி ஆண்டு பஞ்சாங்கம் இணைப்பு, அகஸ்தியர் சன்மார்க்க சங்கத்தின் இணைப்பு, இவ்வனைத்தும் இருபது ரூபாயில் இயலாது வேறு யாராலும் சார்!
- எஸ்.சுந்தர், திருநெல்வேலி.



பங்குனி உத்திரம் பக்தி ஸ்பெஷலில் வெளியாகியிருந்த பத்து மலை முருகன் ஆலயம் குறித்த கட்டுரையைப் படித்ததும் பிரமித்துப் போனேன். காரணம் பத்து மலை முருகன் திருவருளால் அந்த உலகளாவிய பக்தர்களைக் கொண்ட உயர்ந்தோங்கிய முருகனாலயத்திற்கு மூன்று முறை சென்று வந்திருக்கும் எனக்கு, அந்த ஆலயம் குறித்து பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள வைத்ததுதான்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வாழ்க்கையில் வரவேற்க வேண்டிய இரு தருணங்களை பொறுப்பாசிரியர் யதார்த்த சிந்தனையின் ஆன்மிக பிரமிப்புணர்வோடு இழையோடவிட்ட விளக்கம் அருமையிலும் அருமை.
- வசந்தா குருமூர்த்தி, காலடி, கேரளம்.

மலேசியா பத்து மலை முருகன் கோயிலைப் பற்றி நினைத்துக்கொண்டு இருந்த நேரத்தில் அதன் கோயிலின் சிறப்பை ஆதி முதல் அந்தம் வரை வெகு விரிவாகவும், சிறப்பாகவும் படங்களுடன் தொகுத்து வழங்கி நேரடி தரிசன அனுபவத்தைத் தந்துவிட்டீர்கள்.
- கே.விஸ்வநாத், பெங்களூரு.

வாசகர்களுக்குத் தேவையானது எது என உணர்ந்து, அந்தந்த காலகட்டத்தில் தேவையான இணைப்புகளை தந்து  ‘‘பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து...’’ என்ற திருவாசக வரி களுக்கு இணையாக அன்பு செய்யும் ஆன்மிகம் இதழுக்கு நன்றிகள். துர்முகி ஆண்டு பஞ்சாங்கம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
- பாபு கிருஷ்ணராஜ், கோவை-2.

பங்குனி உத்திர சிறப்பிதழான இவ்விதழில் மலேசியா முருகன் கோயிலின் முருகன் உற்சவர், மூலவர் மற்றும் உற்சவர் விக்ரகங்கள் மற்றும் அறுபடை வீடுகள் ஆகியவற்றை தரிசிக்க செய்ததோடு மலேசியா கோயில்களின் சிறப்புகளை வெளியிட்டது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
- கே.சிவகுமார், சீர்காழி.

கடந்த ஆன்மிகம் பலன் இதழில் ‘அரோகரா’ ‘அரோகரா’ திருஞானசம்பந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற விவரம் அறிந்தேன். இத்தகைய புதிய விவரங்கள் பல வழங்கும் ஆன்மிக பலன் இதழுக்கு நன்றி.
- மு.நடராசன், திண்டுக்கல்.

பொறுப்பாசிரியர் வழங்கிய பத்து மலை முருகன் பற்றிய அருளுரை அகம் மகிழச் செய்த உரை. உரையில் உறைந்துள்ள பக்தி என் மனத்தில் ஊதுபத்தி மணமாக அரைத்த சந்தனத்தின் வாசமாக நெஞ்சில் நிறைந்தது நேரில் தரிசித்த மகிழ்ச்சி. நன்றிகள்.
- கே.ஏ.என்.சிவம், பெங்களூரு.

திருப்பூர் கிருஷ்ணனின் குறளின் குரலை தொடர்ந்து படித்து வருகிறேன். திருக்குறளுக்கு பல்வேறு இடங்களிலிருந்து, இதிகாசத்திலிருந்து, இலக்கியத்திலிருந்து ஆன்மிக பெரியோர்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்துக்காட்டுச் சொல்லி விளக்குவது மிகவும் சுவையாக உள்ளது.
- ப.தங்கவேலு, பண்ருட்டி.

ஆன்மிகப் பலன் அட்டைப்படம் - முருகனின் திருமண காட்சி மிக... மிக அற்புதமான, அழகான காட்சி. கவிஞர் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, வாழ்க்கையை எப்படி நடத்துவது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. ஆன்மிக பலன் கட்டுரைகள் ஒவ்வொன்றும் பத்தரை மற்றுத் தங்கத்தாலான நகை என்றால் அது மிகையில்லை.
- இரா.வைரமுத்து, சென்னை-13