அகர்வால் ஸ்வீட்!
ரீடர்ஸ் கிளாப்ஸ்!
வீட்டுலே இன்னும் கல்யாணப் பேச்சு எடுக்கவில்லை என்கிற ஜெய்யின் ஆதங்கம் நியாயமானதே. அஞ்சலியாவது ஜெய் வீட்டில் பேசி ஏதாவது ஸ்டெப் எடுக்கலாம். - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
நடிகர் ஜெய்யின் ஆதங்கம் கோடிக்கணக்கான தமிழ் இளைஞர்களின் ஆதங்கமே. - பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.
கணவனை நம்பி வந்த மனைவியை கைவிடவும் கூடாது, அதே சமயம் பெற்ற தாயை உதாசீனப்படுத்தவும் கூடாது என்கிற பயில்வான் ரங்கநாதனின் ‘டைட்டில்ஸ் டாக்’ கட்டுரை அனைவரும் பின்பற்ற வேண்டிய கொள்கையைக் கொண்டது. - பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.
தமிழ் சினிமாவை சிறப்பான இடத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது செழியன் இயக்கிய ‘டுலெட்’. சிறப்பான விமர்சனம் கொடுத்ததோடு, ‘மக்களின் வலியைப் பேசியிருக்கிறது’ என்று படம் பற்றிய ஹீரோ சந்தோஷின் நேர்காணலையும் வெளியிட்டது சிறப்பு. - இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
66ஆம் பக்கத்து சரிதாவின் புளோஅப்பில் என்னென்னவோ தெரியுது, ஏதேதோ புரியுது என்று கமெண்டு அடித்திருக்கிறீர்கள். என்னென்னவோ தெரிவது உண்மைதான்; ஏதேதோ புரியுது என்பதுதான் புரியவில்லை. - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
நடுப்பக்க அகர்வால் ஸ்வீட்டுக்கு செம்மொழியில் கமெண்டு அடிக்காமல், ஆங்கிலத்தில் தத்துவம் போட்டிருக்கிறீர்களே, நியாயமா? - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஊர் உலகமே மறந்துவிட்ட ருக்மிணி விஜய்குமார் போன்ற நடிகைகளை நினைவுபடுத்தி, அவர்களைப் பற்றிய அறியாத தகவல்களை வாரந்தோறும் வழங்கும் பைம்பொழில் மீரானுக்கு நன்றி. - கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
|