
இயக்குனர் பாண்டிராஜிடம் ‘ரத்தினச் சுருக் பேட்டி’யில் எப்போதும் நினைப்பது? என்ற கேள்விக்கு ‘எட்டாததை தொடணும்!’ என்ற அவரின் பதிலை தந்து எங்களது மனதை தொட்டுவிட்டார்!
மு.பெரியசாமி, தேனி.
‘வெடி’ படத்தின் விமர்சனம் சினிமாவில் பார்த்த எபெக்டா இருந்தது தலைவா!
எஸ்.முருகேசன், புதுச்சேரி.
‘3’படத்தில் தனுஷ்- ஸ்ருதிஹாசன் இடையே உதடு கவ்வும் முத்தம் காட்சி இருக்கா! அப்பாவுக்கு தப்பாத பொண்ணா இருக்குதுங்கோ!
டி.சந்திரன், திருப்பூர்.
கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ நிதிக்காக த்ரிஷா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரவேற்கிறோம்.
ஜி.டி.சூர்யா, நெல்லை.