வேலூர் மாவட்டம்





                  வேலூர் மாவட்டத்தில் பிறந்த நந்தா ஐ.பி.எஸ் அதிகாரி பயிற்சி முடிக்கிறார். பயிற்சி முடிந்ததும் தன் சொந்த ஊருக்குத் திரும்புகிறார். தன் கண் எதிரே சட்டத்தை மீறும் வில்லனை தட்டிக் கேட்கிறார். ஹீரோவுக்கும் வில்லனுக்குமான மோதலில் நந்தா கம்பீரமாக ஜெயிப்பதுதான் கதை.

போலீஸ் அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருத்துகிறார் நந்தா.  காக்கி சட்டை அணியும்போது மிடுக்கான நடிப்பையும், கலர் சட்டை அணியும் போது காதலையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

பாடல்களில் மட்டும் வந்து போகும் பூர்ணா ஒரு அழகு தேவதை.

சந்தானத்தின் காமெடிக்கு சிங்கிள் ஓ.கே போடலாம்.

வில்லனாக நடித்துள்ள புதுமுகம் நீலகண்டனுக்கு பாஸ் மார்க் வழங்கலாம்.வெற்றியின் ஒளிப்பதிவும் சுந்தர் சி.யின் இசையும் படத்துக்கு பக்க பலம் என்று சொல்லலாம்.

காக்கி சட்டை கதையை கலக்கல் கமர்ஷியல் படமாக இயக்கியுள்ள ஆர்.என்.மனோகர் ரசிகர்களின் நம்பிக்கைகு உரம் போட்டுள்ளார்.