நம்பர் ரா.1





               இந்திய திரைப்படங்களில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘ரா.ஒன்’.

உலகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஜி&ஒன் என்ற கேரக்டரிலும் தமிழ் பேசும் சேகர் சுப்ரமணியம் என்ற கேரக்டரிலும் ஷாருக்கான் நடித்துள்ளார். பஞ்சாபி அம்மாவாக நடித்துள்ளார் கரீனா கபூர். இவருக்கு கணவனுக்கும் மகனுக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி சமரசம் செய்து வைக்கும் பொறுப்பான கேரக்டர்.

ரா.ஒன் என்ற தீய சக்தியாக அர்ஜூன் ராம்பால் நடித்துள்ளார்.சிட்டி என்ற எந்திரன் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். வில்லாதி வில்லனாக கல்நாயக் என்ற கேரக்டரில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

ஏழ்மையில் வாடும் பெண்ணாக ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ளார்.முக்கிய வேடத்தில் சீனா, அமெரிக்கன் நடிகர் டாம் வு, நடித்துள்ளார். மகனாக பிரதீக் சுப்ரமண்யம் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் அர்மான் வர்மா.

கதைக்கு திருப்பு முனை ஏற்படுத்தக் கூடிய காட்சியில் அமிதாப் பச்சன் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.கடுமையான உடற்பயிற்சி உணவுக் கட்டுப்பாடு மூலம் 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் ஷாருக்கான். சண்டைக்காட்சியில் டூப் பயன்படுத்தாமல் நடித்துள்ளார்.

மும்பையில் யாஷ் ராஜ் ஸ்டுயோவில் படப் பிடிப்பு நடந்த போது ரஷ்ய அதிபர் டிமிர்டி மெட்தேவ் விஜயம் செய்து ஷாருக் நடிப்பை வெகுவாக பாராட்டினாராம்.

இந்தியா, அமெரிக்கா, இத்தாலி நாடுகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான தொழில் நுட்ப கலைஞர் கள் இரவு பகல் பாராமல் உழைத்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்நாடு, வெளிநாடு என்று 15 ஸ்டூயோக்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த நிக்கோலா பெக்கோரி னியுடன் இணைந்து நம்மூர் மணிகண்டனும் ஒளிப் பதிவு செய்துள்ளார்.‘அகாடமி விருது’ பெற்ற மார்ஷன் வால்ஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
‘ஆஸ்கர் விருது’ பெற்ற ரசூல் பூக்குட்டி டால்பி சரவுண்ட் 7.1 தொழில் நுட்பத்தில் ஒலி அமைத்துள்ளார்.

2டி, 3டி தொழில் நட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு உலகம் முழுக்க 3000க்கும் அதிகமான பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன.

ஈராஸ் இண்டர் நேஷனல், கௌரிகான், ரெட் சில்லிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழில் அபிராமி மெகாமால் வெளியிடுகிறது.
 சுரேஷ்ராஜா