100/100 இசையமைப்பாளர்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

             மலையாள உலகின் இளையராஜா என்று வர்ணிக்கப்படும் ரவீந்தரனின் இசை வாரிசுதான் சாஜன் மாதவ். ‘வீர சேகரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவருக்கு சமீபத்தில் வெளியான ‘முரண்’ நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது.

‘முரண்’ படத்தில் பெரிய டெக்னீஷியன்கள் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும் ஹீரோவுமான சேரன் முடிவு செய்திருந்தார். ‘நாளை என்னவென்று’ என்ற பாடலை கேட்ட பிறகு என் மீது நம்பிக்கை வைத்து சேரனும், இயக்குனர் ராஜன் மாதவ்வும் இந்த வாய்ப்பை கொடுத்தார்கள். த்ரில்லர் படமான இதில் பாடலை விட பின்னணி இசைக்கு அதிக ஸ்கோப் இருந்தது.

‘‘புது டீம் மாதிரி தெரியலை என்று சொன்ன சேரன் பின்னணி இசைக்கு 100 மார்க் கொடுக்கிறேன் என்று சொன்னது’’ எனக்கு மிகப்பெரிய விருந்தாக எண்ணுகிறேன். எனக்கு இசை தெரியும் என்பதற்காக என்னுடைய படங்களில் தேவையில்லாத விஷயங்களைத் திணிக்க மாட்டேன்.

‘நான் கண்டேன்...’ பாடலை போல் சிம்பிளான டியூன்தான் என்னுடைய ஸ்டைல் என்று சொல்லும் சாஜன் மாதவ் தற்போது ‘கதிர்வேல்’ உள்பட நான்கைந்து படங்களுக்கு இசையமைக்கிறார்.
எஸ்