
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை, முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்கிற கேரக்டரில் ‘சகுனி’ படத்தில் நடிக்கிறார்
கார்த்தி.
பார்த்திபன் நடித்து, இயக்கியுள்ள ‘
வித்தகன்’ படத்தில் மிலிந்த் சோமன் கேரக்டருக்கு, கௌதம் வாசுதேவ்மேனன் குரல் கொடுத்துள்ளார்.
‘சேது’ படத்தை இந்தியில் ரீமேக் செய்த டைரக்டர் சதீஷ் கௌசிக், விரைவில்
‘பிதாமகன்’ படத்தையும் இந்திபேச வைக்கிறார்.
மலையாளத்தில் ‘மருதவேலு’ கைலாஷ் ஜோடியாக அபிநயா நடிக்கும் படம்
‘தி ரிப்போர்ட்டர்’ முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி, அனன்யா நடிக்கிறார்கள். கதைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் ‘‘ஹீரோ ஹீரோயின் இரண்டும் அபிநயா தான்’’ என்று சொல்லி யிருக்கிறாராம் இயக்குன வேணு கோபால்.
சிம்புவின்
‘வேட்டை மன்னன்’ படத்தி ரவுடித்தனமான கேரக்டரில் நடித் துள்ளார் ஹன்ஸிகா.
‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ திரு இயக்கும் ‘சமரன்’ படத்தில் மலையேறும் வீரர் கேரக்டரில் நடிக்கிறார் விஷால்.
சிம்புதேவன் இயக்க உள்ள படத்தில் தனுஷ் ஜோடியாக
ஜெனிலியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து லட்ச ரூபாய் செலவில் மும்பை வீட்டுக்கு இண்டீரியர் டெகரேஷன் செய்துள்ளார்
அசின்.
முதன்முறையாக மலையாளத்தில்
‘கிரக நாயகன்’ என்ற படத்தில் நடிக்கிறார் சோனியா அகர்வால்.
சுந்தர்.சி. இயக்கும் அடுத்த படத்துக்கு
‘மசாலா’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.