முதல் படத்தில் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்கிய பறவை நடிகை இப்போது மூன்று பத்து களைச் சம்பளமாகக் கேட்கிறாராம்.இத்தனைக்கும் அவர் ஐம்பதாயிரம் வாங்கிய படம் மட்டும்தான் ஓடியது. இந்நிலையில் சூப்பர் மருமகனின் படத்துக்கு அவர் கேட்ட சம்பளத்தைப் பார்த்து மிரண்ட படக்குழு பட்ஜெட்டுக்கேற்ப குறைத்துத்தான் பேசினார்களாம்.
இதற்கிடையில் ஆந்திராவில் பெரியநடிகர் ஒருவருடன் ஒரு படத்தில் அவர் ஒப்பந்தமானாராம். இவர்களுக்கு கொடுத்த கால்ஷீட் தேதிகளை தெலுங்குப் படத்துக்கு ஒதுக்கிவிட்டாராம். இதனால் கடுப்படைந்த ‘த்ரீ’ டைரக்டர் அம்மணியை படத்திலிருந்து நீக்கிவிட்டாராம்.