நமீதாவின் உணவகம்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     வெங்கட் பிரபு அடுத்து இயக்க உள்ள ‘நேரடி ஒளிபரப்பு’ படம் 3டி யில் வர உள்ளது. அடுத்தும் ஒரு 3டி ஸ்க்ரிப்ட் வைத்துள்ளாராம்.

இந்திய& அமெரிக்க கூட்டுத் தயாரிப்பில் உருவான ‘த அதர் எண்ட் ஆஃப் த லைன்’ படத்தை பத்துமுறை பார்த்திருக்கிறாராம் ஸ்ரேயா. அந்தப் படத்தில் அம்மணி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

பாரதிராஜா இயக்கும் ‘அன்னக் கொடியும் கொடிவிரனும்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் பார்த்திபன், மதுரை வட்டார மொழியைக் கற்று வருகிறார்.

சூரத்தில் ஜவுளிக்கடை வைத்திருக்கும் நமீதா, அங்கே விரைவில் உணவகம் திறக்க உள்ளார்.

‘பாளையங்கோட்டை’ பட இயக்குனர் ஷேகர்.ஜியிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் ராஜசூர்யா. இவர் தனது குருநாதரைப் போலவே விரைவில் ஒரு படத்தை இயக்கி, கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

பரத் சிறந்த நடனக் கலைஞர். ‘யுவன் யுவதி’ படத்தில் ஹீரோயின் ரீமாகல்லிங்கல்லுக்கு ஒரு பாட்டுக்கு 15 முறை நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்தாராம்.

ராஜசேகர் இயக்கிய ‘சத்யம்’ படத்தில் த்ரிஷாவை நாயகியாக்க திட்டமிட்டிருந்தார் விஷால். அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு போய்விட்டது. இப்போது ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ இயக்குனர் திருவின் அடுத்த படத்தில் விஷால்&த்ரிஷா இணைகிறார்கள்.

அக்டோபர் மாதம் பெல்ஜியத்தில் நடக்க உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு இப்போதே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

‘காஞ்சனா’வை இந்தியில் ரீமேக் செய்த பிறகே ‘ரீபெல்’ படத்தை இயக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.
 நெல்பா