ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் காதலிப்பது சினிமாவுக்கு பழசு. ஆனால், இதில் இரண்டு ஆண்களை ஒரு பெண் காதலிக்கிறார். முடிவு என்ன என்பதை அதிரடியாக சொல்லியிருக்கிறார்கள்.
சந்தோஷ் ஆக்ஷன், காதல் என்று அடுத்த வீட்டு பையன் போல் இயல்பான நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். பிரபாவின் நடிப்பில் குறை எதுவும் இல்லை. மாயா உன்னிக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை என்றாலும் அழகு கை கொடுக்கிறது. சபேஷ் முரளி இசையில் ‘அடி ஆத்தாடி...’ ரீமிக்ஸ் பாடல் தாளம் போட வைக்கிறது.
ஒரு பெண் இரண்டு ஆண்களை எப்படி காதலிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு யாரும் எதிர்பாராத பதிலையும் கொடுத்து ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் இயக்குனர் அன்பு அருள்நிதி.