‘‘அண்ணன் தங்கை கதைகளில் ‘பரிமளா திரையரங்கம்’ படம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்’’ என்று அழுத்தம் கொடுத்து பேசுகிறார் இயக்குனர் சரவண ஜீவன். “நடிகர்களில் நான் சந்தித்த நல்ல நண்பர்களில் ஸ்ரீமனும் ஒருவர். அவர்தான் வேல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் எனக்கு இந்தப் படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தார்.
தன் பாசத்துக்குரிய தங்கை காதல் வயப்படும் போது அண்ணன் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லியுள்ளேன். இதில் நாயகனாக புதுமுகம் விகாஷ் அறிமுகமாகிறார். அண்ணனாக ‘பொல்லாதவன்’ கிஷோர், தங்கையாக ‘ரேனிகுண்டா’ சனுஷா நடிக்கிறார்கள். கண்ணன் இசையில் டி.ராஜேந்தர் பாடியுள்ள ‘ஊருல திருவிழா...’ பாடல் இளசுகளை சுண்டியிழுக்கும் ” என்கிறார் சரவண ஜீவன.
எஸ்.ஆர்