அப்போ சூர்யா இப்போ விஜய்



Vannathirai magazine, Vannathirai weekly magazine, Tamil Magazine Vannathirai, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

         நாக சைதன்யாவுடன் நடிக்கும் ‘பேஜவாடா’ படத்துக்காக 1/2 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் அமலாபால்.

‘555’ படத்தில் சிக்ஸ்பேக் உடல் தோற்றத்துடன் நடிக்கிறார் பரத்.

‘ரத்த சரித்திரம்’ படத்தில் சூர்யாவுடன் மோதிய அபிமன்யுசிங் ‘வேலாயுதம்’ படத்தில் விஜய்யுடன் மோதுகிறார். தவிர இன்னொரு வில்லனாக வினீத் குமார் நடிக்கிறார்.

விஜய் இயக்கத் தில் விக்ரம் நடிக்கும் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக ‘மதராசபட்டினம்’ எமிஜாக்சன் நடிக்கிறார். அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை இருக்குமாம்.

மீபத்தில் கனடாவில் நடந்த படவிழாவில் பல மொழி களை சேர்ந்த 350 படங்களை திரையிட்டார்களாம். அதில் தமிழ் பிரிவில் கலந்து கொண்ட ‘ஆடுகளம்’, ‘வர்ணம்’ படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாம்.

சிம்புதேவன் இயக்கும் படத்தில் நாயகனாக தனுஷ் நடிக்கிறார். இந்தப்படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாகிறது.

‘சகுனி’, ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்’, ‘மயக்கம் என்ன’, முப்பொழுதும் உன் கற்பனைகள்’ வெற்றிமாறன் இயக்கும் படம், விஜய் இயக்கும் படம், சிம்பு தேவன் இயக்கும் படம்என பிஸியாக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். தவிர இந்தியில் ‘ஜோக்கர்’ உள்பட நான்கு படங்கள், தெலுங்கில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

டைட்டில் ரோலில் பூர்ணா நடிக்கும் படம் ‘கருவாச்சி’. அறிமுக இயக்குனர் சிவா இயக்கும் இதில் நாயகனாக ‘கல்லூரி’ அகில் நடிக்கிறார்.
எஸ்