நனைந்த படமெடுத்த இயக்குநர், உலக விருது நிறுவனத்தின் தயாரிப்பில் தேவ நடிகையின் தம்பியைக் கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இருபது நாட்கள் படப் பிடிப்பை நடத்திவிட்டுத் திரும்பிவிட்டார்கள்.அப்படிப் பாதியிலேயே திரும்பிவரக் காரணம் அந்த இருபது நாட்களில் போட்ட கணக்கைவிட அதிகமாகச் செலவானதுதான் என்றார்கள். இப்போது புதிதாக ஒரு சிக்கல் தோன்றியிருக்கிறதாம்.
படத்தில் அண்மையில் வெளியான சூடான படத்தில் நாயகியாக நடித்த இருவரில் ஒருவர்தான் நாயகி. அந்த நாயகியை வைத்து இவ்வளவு நாட்கள் படமும் எடுத்தாயிற்று. இந்த நிலையில் இந்த நாயகி வேண்டாம். வேறு நாயகியை வைத்துப் படத்தை எடுக்கலாம் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறாராம். இதைத் தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.