சிறு வயதில் தனக்கு அடைக்கலம் கொடுத்த எஜமானுக்கு நாயகன் ஆர்.கே எப்படி நன்றி பாராட்டுகிறார் என்பதுதான் படம்.
அப்பாவி, அடப்பாவி என்று சொல்லுமளவுக்கு கிராமத்து இளைஞராகவும் நகரத்து ரவுடியாகவும் நடித்துள்ளார் ஆர்.கே. நடிப்பிலும், உடுப்பிலும் வித்தியாசம் காண்பித்து வியக்க வைக்கும் அவர் கிளைமாக்ஸ் காட்சியில் உருக வைக்கிறார். போலீஸ் உடைக்கு அழகு சேர்க்கும் கார்த்திக் நடிப்பு கம்பீரம். சதாவை விட புதுமுகம் திவ்யா மனதை டச் பண்ணுகிறார். கஞ்சா கருப்பு, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் முழுமை தெரிகிறது. ஸ்ரீகாந்த் தேவா இசையில் ‘வாரேன்... வாரேன்...’ பாடல் ஒன்ஸ்மோர் கேட்கலாம்.
நீர்ல எனக்கு பிடிக்காதது கண்ணீர் என்று பல காட்சிகளில் பஞ்ச் கொடுக்கிறார் வசனகர்த்தா பிரபாகர். தன்னுடைய விறு விறு திரைக்கதை ஸ்டைலால் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் இயக்குனர் பி.வாசு.