சல்மானா? அலறுகிறார் கேத்ரினா!



* ஒரே நேரத்தில் மூன்று டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால், இரண்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டார் சோனாக்ஷி சின்ஹா. சினிமாவைவிட டிவியில் நல்ல வரும்படியாம்.

* நிஷிகாந்த் காமத் இயக்கும் ‘ராக்கி ஹாண்ட்சம்’ படத்தில் ஸ்ருதிஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

* தனது கடைசி படமான ‘ஆல் இஸ் வெல்’, வசூலில் அவ்வளவாக சோபிக்காததால் துவண்டு போயிருக்கிறார் அசின்.



* ‘சன் ஆஃப் சர்தார்’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் சஞ்சய்தத் நடிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் அஜய் தேவ்கன்.

* பிரபலமான ஆருஷி கொலை வழக்கு தொடர்பாக, விஷால் பரத்வாஜ் தயாரிக்கும் ‘தல்வார்’ படத்தில் தபு நடிக்கிறார்.

* தீபிகா கொஞ்சம் சதை போட்டால் இன்னும் டாப்புக்கு வருவார் என்று தமாஷாக கமெண்ட் அடிக்கிறார் அக்ஷய் குமார்.

* ரகசிய தொண்டு அமைப்பு மூலம் சத்தம் இல்லாமல் உதவிகளைச் செய்து வருகிறார் அஜய் தேவ்கன்.

* தெலுங்கு ஹீரோயின் ஷ்ரத்தா தாசுக்கு ஒரு பாலிவுட் படத்தில் சிபாரிசு செய்திருக்கிறார் சல்மான் கான்.

* ‘ரா ஒன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஐந்து ஆண்டுகள் கழித்து எடுக்க விரும்புவதாகவும், அதில் தனது மகன் ஹீரோவாக நடிக்க, தான் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறார் ஷாருக்கான்.

* சல்மான் கானுடன் இனி சேர்ந்து நடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என கொதிக்கிறார் அவரது மாஜி காதலி கேத்ரினா கைப்.

- ஜியா