கமலுக்கு நோ கால்ஷீட்! ஸ்ருதி கண்டிப்பு!!
‘செல்வந்தன்’ படத்தில் ஹீரோ மகேஷ்பாபு ஒரு கிராமத்தையே தத்தெடுப்பார். படத்தின் ஹீரோயின் ஸ்ருதி, நிஜமாகவே அதுமாதிரி தத்தெடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அப்பா கமல்ஹாசனோடு சேர்ந்து நடிக்க ஆசையாம். ஆனால் - அப்பாவே வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டாலும் இப்போதைக்கு நோ கால்ஷீட்டாம். “தமிழ், இந்தி, தெலுங்குன்னு வருஷம் முண்ணூத்தி அறுபத்தஞ்சரை நாளும் காலில் சக்கரம் கட்டிக்கிட்டு ஓடிக்கிட்டிருக்கேன். வயசு இருக்கறப்பவே சம்பாதிச்சாதானே பிற்காலத்தில் நிம்மதியா குடும்பம் நடத்த முடியும். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது அர்த்தமில்லாத பழமொழி அல்ல” என்கிறார் ஸ்ருதி. கமலும், சரிகாவும் எட்டு அடி பாய்ந்திருப்பார்களா? அவங்க வாரிசு எண்ணூறு அடி பாயுது பாருங்க.
- தேவராஜ்
|