ரஜினியின் மகளாக தன்ஷிகா!
சின்ன வயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகை தன்ஷிகா. பா.ரஞ்சித் இயக்கும் ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டும் என்றதுமே உணர்ச்சிவயப்பட்டு விட்டார். தொடர்ச்சியாக தொண்ணூறு நாட்களுக்கு கால்ஷீட் வேண்டும் என்று கேட்டபோது எந்த தயக்கமும் காட்டவில்லையாம். படத்தில் மாடர்ன் கேர்ளாக நடிக்கிறார். மது மயக்கத்தில் தள்ளாடும் காட்சிகளும் உண்டு என்று பேச்சு. ஆனால், தன்ஷிகாவாக தன் பாத்திரத்தைப் பற்றி எதுவும் வாய் திறக்க மறுக்கிறார்.
ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தே என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். முக்கிய வேடங்களில் கிஷோர், ‘அட்டக் கத்தி’ தினேஷ், ‘மெட்ராஸ்’ கலையரசன் ஆகியோர் நடிக்கிறார்கள். செப்டம்பர் மத்தியில் மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தன்ஷிகாவுக்கு யார் ஜோடி என்று இன்னும் முடிவாகவில்லை என்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் முடியும்வரை தன்ஷிகா வேறு யாருக்கும் கால்ஷீட் கொடுப்பதாக இல்லையாம்.
- தேவ்
|