தல போல வருமா?
எளிமையில் கின்னஸ் ரெக்கார்ட் படைப்பார் போல அஜித்குமார். ‘சிறுத்தை’, ‘வீரம்’ படங்களை இயக்கிய சிவாவின் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புக்காக சமீபத்தில் கொல்கத்தா போயிருந்தார் அஜித். அங்கிருப்பவர்களுக்கு இவரை அடையாளம் தெரியாததால் சுதந்திரமாக தெருக்களில் சுற்றித் திரிந்தார். சாலையோரக் கடைகளுக்குச் சென்று வடை, பஜ்ஜி, ஜிலேபி, முறுக்கு என்று விருப்பப்பட்டதை நொறுக்கியிருக்கிறார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்கள் எல்லோரும் ஜம்மென்று நாற்காலியில் வீற்றிருக்க, ஹீரோவான அஜித் மட்டும் பிளாட்பாரத்தில் அமர்ந்து அடுத்து எடுக்க வேண்டிய காட்சி பற்றி இயக்குனருடனும், தொழில்நுட்பக் கலைஞர்களுடனும் தீவிரமாக விவாதிப்பாராம். இதையெல்லாம் பார்த்தவர்கள் சென்னைக்கு வந்த பிறகு ‘தல’புராணத்தை கோடம்பாக்கம் முழுக்க ஓதிவருகிறார்கள். இமேஜை தன்னுடைய தலைக்கு மேல் இருக்கும் சமாச்சாரமாக நினைக்கும் ஆளுமையால் மட்டுமே இப்படியெல்லாம் எளிமையாக நடந்துகொள்ள முடியும். போன தலை முறைக்கு ரஜினி. இந்தத் தலைமுறைக்கு அஜித்.
- தேவராஜ்
|