சேச்சி தேசத்து செய்தி!



பொதுவாக கேரளத்தில் இருந்து தமிழகத்துக்குத்தான் நடிகைகள் இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். இங்கிருந்து அங்கே போவது அரிதான நடவடிக்கை. அந்த அரிதிலும் அரிதான செயற்பாடாக நம்மூர் வேதிகா அங்கே தடம் பிடிக்க இருக்கிறார். ஏற்கனவே ‘சிங்காரவேலன்’, ‘கசின்ஸ்’ படங்களில் அவர் நடித்திருந்தாலும் இப்போதைய என்ட்ரி கொஞ்சம் பெரியது.



பிருத்விராஜ் ஜோடியாக ‘ஜேம்ஸ் அண்ட் ஆலிஸ்’ படத்தில் நடிக்கிறார். ‘காவியத்தலைவன்’ படத்தில் இவர் சிறப்பாக நடித்திருந்தும், படம் பெரியதாக வெற்றி அடையாமல் போதுமான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். பாலாவின் ‘பரதேசி’யும் போதுமான மைலேஜை தரவில்லை. எனவே காவியத்தலைவனான பிருத்விராஜே இவருக்கு மலையாளத்திலும் சிபாரிசு செய்து கொண்டிருப்பதாகக் கேள்வி.