வெற்றி கிடைக்கும்வரை...



‘வெத்துவேட்டு’ ரிலீஸ், திருமண நிச்சயதார்த்தம் என ஒரே நேரத்தில் அடுத்தடுத்து சந்தோஷ வைபவங்கள் நடந்த மகிழ்ச்சியை ஹரீஷ் முகத்தில் பார்க்க முடிந்தது. அவருடன் ஒரு சந்திப்பு.

‘வெத்துவேட்டு’ அனுபவம் எப்படி?

இது என் 9ஆவது படம். இந்தப் படத்தில் மறக்க முடியாத அனுபவம் கிடைத்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாளவிகா மேனன் உட்பட ஏராளமான ஆர்ட்டிஸ்டுகளுடன் நடித்தேன். தாஜ்நூர் பிரமாதமாக இசையமைத் திருந்தார். இயக்குனர் மணிபாரதியை ஆட்டோ பாமுக்கு ஒப்பிடுவேன். பார்க்க சாதுவாக இருந்தாலும் பெரிய கருத்துகளை துணிச்சலாக சொல்லக்கூடியவர். பொதுவாக இயக்குனர்கள் ஒரு நடிகரிடம் தங்களுக்கு என்ன தேவையோ அதை சரியாகச் சொல்லி ஸ்கிரீனுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள்.

அந்த ஆற்றல் மணிபாரதியிடம் அதிக மாக இருந்தது.  உண்மையில் இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். இது உதட்டில் இருந்து வரும் வார்த்தை அல்ல. மனதில் இருந்து வரும் வார்த்தை. ‘கோரிப்பாளையம்’ படத்தில் நடித்தபோது எந்தளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ, அதுபோல இந்தப் படத்துக்காகவும் அனைத்து தரப்பில் இருந்தும் வரவேற்பு கிடைத்தது.

உங்களுக்கு கிடைத்த பாராட்டு?

முதல் பாராட்டு என்னுடைய அம்மாவிடமிருந்துதான் வரும். அப்பா எடிட்டர் என்பதால் அம்மாவுக்கு சினிமா அறிவு அதிகம். அந்த வகையில் என்னுடைய நிறை குறைகளை அழுத்தமாக சொல்லிவிடுவார். இப்போது அந்த லிஸ்ட்டில் என் வருங்கால மனைவி அபிநயாவும் சேர்ந்திருக்கிறார். இண்டஸ்ட்ரியைப் பொறுத்தவரை எனக்கு பரிச்சயமான லிங்குசாமி, வசந்தபாலன், சரண், நந்தா பெரியசாமி, விமல், சரண், சூரியிடமிருந்தும் பாராட்டு வரும்.

அவ்வளவாக பரிச்சயம் இல்லாத பசுபதி, இயக்குனர் விஜய் ஆகியோரிடமிருந்தும் பாராட்டு வரும்.
அடுத்து?சரவணன் பெரியசாமி இயக்கத்தில் ‘இறையான்’, யாசின் இயக்கத்தில் ஒரு படம். இவ்விரு படங்களும் என்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும்.

பேர் சொல்லும் அளவுக்கு உங்கள் வளர்ச்சி இல்லையே?

தோல்வியைக் கண்டு பின்வாங்குவதில்லை. தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை போராடுவேன்.

-ரா