தூள் பரத்த வருகிறார்!



உடல் வறுத்தி நடித்து பேர் வாங்க உழைக்கும் நாயகர்கள் பட்டியலில் பரத் ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். 'ஐந்து ஐந்து ஐந்து' படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்து உடற்கட்டைக்காட்டியவர், அதிரடி ஆக்ஷன் படங்களை விரும்புகிறார்.

அவரது விருப்பத்துக்கு ஏற்றபடி அமைய இருக்கிறது அருண் கிருஷ்ணசாமி இயக்க இருக்கும் படம். இன்னும் பெயரிடப் படாத அந்தப்படம் ஆக்ஷன், த்ரில்லர் வகை என்றாலும் காதலும் காமெடியும் கைகோர்த்து நிற்குமாம்.

பூபதி பாண்டியன் மற்றும் 'போடா போடி' இயக்குனர் விக்னேஷ் சிவா ஆகியோரிடம் உதவி யாளராக இருந்தவர் என்பதால் அருண் கிருஷ்ணசாமியின் இயக்கத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

ரேயான் ஸ்டுடியோஸ் சார்பில் கே.கீதா தயாரிக்கும் படம் இது. ஆபாச போஸ் கொடுப்பதாக தன்னைப்பற்றி மீடியாக்களில் வரும் செய்தியறிந்து ரொம்பவே மன வருத்தத்தில் இருக்கிறாராம் எமி ஜாக்சன். 'கூந்தல் இருக்கிறவதானே அள்ளி முடிய முடியும். டோன்ட் கேர்' என்று தோழிகள் சொன்னதில் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருக்கிறாராம்.