ஐவராட்டம்



சிவகங்கை வட்டாரத்தில் ஐந்து பேர் மட்டுமே விளையாடும் கால்பந்து விளையாட்டின்  பெயர்தான் ஐவராட்டம். கால்பந்து விளையாட்டில் தனக்கு எதிரிகள் யாரும் இருக்கக் கூடாது என்று நினைப்பவர் ஜெயப்பிரகாஷ்.

ஒரு பக்கம் சாதிப் பெருமை, இன்னொரு பக்கம் ஐவராட்டப் பெருமை என இருக்கும் ஜெயப்பிரகாஷுக்கு அவருடைய தம்பியே எதிரியாகிறார். அதன் முடிவு என்ன என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

ஆண்டியப்பன் சேர்வை என்ற கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் ஜெயப்பிரகாஷ். நாயகன் நிரஞ்சனுக்கு இதுதான் முதல் படமாம். ஆனால் அந்த சுவடு தெரியாதளவுக்கு ஜமாய்த்திருக்கிறார். நித்யா ஷெட்டி பாடலுக்கு வந்து போகிறார்.

துஷ்யந்த் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியி ருக்கிறார். தம்பியாக வரும் செந்தில் இயல்பு காட்டி தன் தேர்வை நியாயப்படுத்துகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து மக்களின் மனநிலையை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் மிதுன் மாணிக்கம்.