லாரன்ஸ் எடுக்கும் விஸ்வரூபம்!



கோடம்பாக்கத்தில் இப்போது பேய்ப் படங்களின் ஆட்சி தீவிரம் காட்டினாலும் அந்த டிரெண்ட்டை ‘முனி‘ படத்தின் மூலம் ஆரம்பித்தவர் ராகவா லாரன்ஸ். முனியின் இன்னொரு வடிவமாக வெளிவந்த ‘காஞ்சனா‘வும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.

 அந்த வரிசையில் விரைவில் வெளிவரவுள்ள படம்தான் ‘காஞ்சனா-2‘.ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வழங்க, ஸ்ரீ தேனான்டாள் பிலிம்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. நாயகி டாப்ஸி. இசை தமன். படத்தைப்பற்றி ஒளிப்பதிவாளர் ராஜவேல் ஒளிவீரனிடம் பேசினோம்.

‘‘இந்தப் படத்தை ஹாரர் மூவி என்று சிங்கிள் ஜானர் படமாக சொல்ல முடியாது. ஏன்னா, இதில் ஹாரர், ரொமான்ஸ், காமெடி, சென்டிமென்ட், குழந்தைகளுக்கான என்டர்டெயின்மென்ட் என எல்லாம் கலந்திருக்கும். மொத்தத்தில் ரசிகர்களுக்கு இன்ட்ரஸ்டிங்கான படமாக இருக்கும்.

ராகவா லாரன்ஸ் மிகச் சிறப்பாக கதையை சொல்லக்கூடியவர். கமர்சியல் படம் என்றால் பாடல், ஃபைட் என ஒரு டெம்ப்லட் ¬வைத்திருப்பார்கள். ஆனால் ராகவா எதையும் சீரியஸாக திங்க் பண்ணக் கூடியவர். அர்ப்பணிப்பு, ரசனை ரொம்ப ஜாஸ்தி. எல்லோரும் அவரை மாஸ்டர் என்றுதான் அழைக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை அவர் ‘மாஸ்டர் ஆஃப் டைரக்டர்ஸ்‘. இந்தப்படத்தில் அவர் எடுத்திருக்கும் விஸ்வரூபம் அனைவரையும் வியக்கவைக்கும்‘‘.

-எஸ்