வானவில் வாழ்க்கை



கல்லூரியில் இசையே கதி என்று வாழும் நண்பர்களுக்கு மத்தியில் புதுவரவாக நாயகன் ஜிதின் வந்து சேருகிறார். ஒரு இசைப்போட்டியில் இவரைப் போல் சக இசைக் கலைஞரான ஜனனியை சந்திக்கிறார்.

காதல் கனியும் நேரத்தில் காதலர்களுக்கிடையே மெல்லிய விரிசல் ஏற்படுகிறது. ஒரு பக்கம் காதல் பிரிவு இன்னொரு பக்கம் இசைப்போட்டி என்று தவிக்கும் ஜிதின் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதுதான் கதை.

அறிமுக நாயகன் ஜிதினுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு இல்லையென்றாலும் தன்னுடைய வேலையை சரியாக செய்திருக்கிறார். நாயகனுக்கு எப்படியோ அது போல் நாயகிக்கும் வேலை குறைவுதான். சில இடங்களில் வந்து போகிறார் ஜனனி. நடிகர், நடிகைகளைத் தாண்டி படத்துல மெயின் அட்ராக்ஷன் பாடல்கள்தான் .

மொத்தம் 17 பாடல்கள். பாடலுக்காக கதையா? கதைக்காக பாடலா? என்ற கேள்வி வருவதை தவிர்க்க முடியவில்லை. இசையமைப்பாளராக திறைமை காட்டிய ஜேம்ஸ் வசந்தன் இதில் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். மசாலாத்தனம் இல்லாமல் எடுத்துக் கொண்ட கதையை நேர்மையாக சொல்லியிருக்கிறார்.