கொங்கணிகா... கொங்கணிகா!



குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து பார்க்கும் வகையில் குழந்தைகளை மையமாக வைத்து அறிமுக இயக்குனர் சிவா.ஜி இயக்கியுள்ள படம் ‘சுட்ட பழம்  சுடாத பழம்’. புதுமுகம் ராஜா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் காஷ்மீரா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

காமெடி சேவைக்காக ரோபோ சங்கர், கிங்காங் களமிறங்கியிருக்கிறார்கள். “இந்தப்படம் ‘குழந்தைக்காக’, ‘மழலை பட்டாளம்’, ‘களத்தூர் கண்ணம்மா’ பட வரிசையில் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கும்.

குழந்தை கதாபாத்திரத்துக்காக சுமார் 100 குழந்தைகளை வரவழைத்து ஆடிஷன் நடத்தினோம். குடும்பத்தை நேசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்” என்கிறார் சிவா.ஜிபவர் ஸ்டார் சீனிவாசன் பாடி நடித்துள்ள ‘கொங்கணிகா... கொங்கணிகா...’ பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம்.

ரா