நயன்தாராவின் புதிய காதலர்?



சிம்பு, வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் காதல் வலையில் சிக்கியிருக்கிறார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். அம்மணி அடிக்கடி இயக்குனர் வீட்டுக்குச் சென்று நட்பு வளர்ப்பதாகக் கூறப்படுகிறது.

அதுசரி, விஷயம் மீடியா வரைக்கும் வந்து விட்டது. நயன்தாரா எப்போதுமே விளக்கம் சொல்ல மாட்டார். விக்னேஷ் சிவன் ஏன் மவுனமாக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை, இப்போது அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் விளம்பரத்துக்கு இந்தச் செய்தி பயன்படும் என்று நினைக்கிறாரோ?

 தேவா