கிராமத்தில் அப்பாவுக்குத் துணையாக பால் வியாபாரம் செய்கிறார் இர்பான். சைடு பிஸினசாக அர்ச்சனாவை சைட் அடிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தக் காதல் ‘கட்’டாகிறது. அந்த சமயத்தில் கலெக்டருக்கு படிக்கும் அருந்ததி நாயரை காதலித்து கலெக்டர் மாப்பிள்ளையாகிவிட வேண்டும் என்று திட்டமிடுகிறார் இர்பான். அந்த திட்டம் நிறைவேறியதா, இல்லையா என்பது படம்.

வில்லேஜ் கேரக்டரும் தனக்கு வரும் என்பதை தன் இயல்பான நடிப்பில் காட்டியிருக்கிறார் இர்பான். அர்ச்சனா கிளாமரில் தாராளம் என்றால், அருந்ததி நாயர் அடக்கி வாசிக்கிறார். சீரிய ஸாக போகும் இடங்களில் தாராளமாக கிச்சுகிச்சு மூட்டுகிறார் சிங்கம்புலி. முரட்டு அப்பா கேரக்டரில் மிரட்டுகிறார் சம்பத்ராம்.
சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு கிராமத்து அழகை படம் பிடித்திருக்கிறது. கண்ணன் இசையில் பாடல்கள் மனதை டச் பண்ணுகின்றன. கலகலப்பாக கதை சொல்லும் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி கடைசி காட்சியில் கண் கலங்க வைக்கிறார்.