டூப் இல்லாமல் பூனம் போட்ட சண்டை!



‘என் வழி தனி வழி’, ‘அச்சாரம்’, ‘வதம்’ ஆகிய படங்களில் நடிக்கிறார் பூனம் கவுர். ‘வதம்’ படத்தில் அவருக்கு ஆக்ஷன் ஹீரோயின் வேடம். முதல்முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

‘டூப்’ போடா மல் அவரே ஒரிஜினலாக நடித்துள்ளார். ஒருமுறை கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வாரம் ஓய்வு எடுத்தார். ‘இந்தப் படம் ரிலீசானா எனக்கு நல்லபேர் கிடைக்கும். அப்படி கிடைச்சா, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசிப்பேன். என் வேண்டுதலை நிறைவேற்ற கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதி வரைக்கும் நடந்தே போவேன்’ என்றார்.