3 ஆம் ஆண்டில் மெகா பாரதம்!



வியாச ரிஷியால் எழுதப்பட்டது  மகாபாரதம். எப்படி வாழ வேண்டும் என்பது ராமாயணம்; எப்படி வாழக் கூடாது என்பது மகாபாரதம். சன் டிவியில் 100 எபிசோடுகளைக் கடந்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது இந்த ‘மகாபாரதம்’ தொடர். ஓ.ஏ.கே.சுந்தர், பூவிலங்கு மோகன், சாக்ஷி சிவா, தேவி ப்ரியா, நீலிமா ராணி உட்பட 100க்கும் மேற்பட்டோர் இந்த தொடரில் நடித்திருக்கிறார்கள். 

சினிமாவுக்கு இணையாக பெங்களூருவில் 1 கோடி ரூபாய் செலவில் இந்தத் தொடருக்காக அரண்மனை செட் அமைத்து படமாக்கியிருக்கிறார்கள். “ரசிகர்களுக்கு நல்ல மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் தமிழில் வந்த நூல்களில் மட்டுமல்லாது இந்திய மொழிகளில்  வெளிவந்த நூல்களிலிருந்தும், இந்தோனேஷியா போன்ற மொழிகளில் வெளிவந்த நூல்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி இந்த தொடரை இயக்கியுள்ளேன்” என்கிறார் இயக்குனர் சி.வி.சசிகுமார்.