“சென்னையில் வாழும் பேச்சுலர் பசங்களைப் பற்றி நிறைய கதைகள் வந்திருந்தாலும் ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ படத்தோட கதை வித்தியாசமாக இருக்கும்” என்கிறார் இயக்குனர் எம்.மருதுபாண்டியன்.

ஃபிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான இவர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். பேச்சுலர் பசங்களைப் பற்றிய கதைன்னா நிறைய நல்ல உதாரணங்கள் இருக்கும். இந்த கதை எப்படியிருக்கும்?
இதில் பேச்சுலர் பசங்களின் வாழ்க்கையை அப்படியே அப்பட்டமாக காட்டியிருக்கிறேன். அதுக்கு காரணம், என்னுடைய ஆரம்ப கால சென்னை வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அதை இரண்டு மணி நேர சினிமாவாக சொல்லியிருக்கிறேன்.
டைரக்டராக வேண்டும் என்ற கனவுடன் சென்னை வரும் இளைஞன் தன் லட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதை ரொம்ப யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன். அவனுடைய வாழ்க்கை முறை, நட்பு, காதல் என எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும்!
எப்படி இருக்கிறார் பாபி சிம்ஹா?
செல்லப்பாண்டியன் என்ற கேரக்டரில் வர்றார். அவருடைய கேரக்டர் ரொம்ப இயல்பாக இருக்கும். வழக்கமான டான்ஸ், ஃபைட் என்று எந்தவித சினிமாத்தனமும் இருக்காது. மொத்தத்தில் ஒரு ரசிகன் தன்னையே திரையில் பார்த்த மாதிரி இருக்கும். அவருடைய ரூம் மேட்ஸாக லிங்கா, ஜெயன் நடித்திருக்கிறார்கள். ஹீரோயின்களாக சரண்யா, பனிமலர், நிஷா நடித்திருக்கிறார்கள்! இந்தப் படத்தில் பாரதிராஜா நடிக்க ஆர்வமாக இருந்தாராமே?
நீங்க சொல்வது நிஜம்தான். சமீபத் தில் இந்தப் படத்தை பாரதிராஜாவுக்கு போட்டுக் காட்டினோம். படத்தை வெகுவாக ரசித்த பாரதிராஜா ரெண்டு, மூணு தடவையாவது படத்தை பார்த்திருப்பார். அதுமட்டுமில்ல, நான் இந்தப் படத்தில் எங்கேயாவது ஒரு இடத்துல கெஸ்ட் ரோலில் நடிக்கிறேன் என்று விருப்பம் தெரிவித் தார். ஆனால் சில நடைமுறைச் சிக்க லால் அது நடக்கவில்லை! -எது எப்படியோ! பாரதிராஜா வரவேற்ற படம் ரிலீஸாகப் போகுது!
-எஸ்