ராய் லட்சுமி கற்றுக்கொண்ட காதல் பாடம்!



முன்னணி தொழிலதிபரைக் காதலிப்பதாகவும், இரண்டு வருடங்களில் அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன் ராய் லட்சுமி பேட்டி அளித்திருந்தார். இப்போது அந்தக் காதல் முறிந்துவிட்டது. அதற்குக் காரணம் ராய் கிடையாது, அந்தத் தொழிலதிபர்தான்.

 காதல் முறிந்தது குறித்து ராய் லட்சுமி கூறுகையில், ‘காதல் தோல்வியைச் சந்தித்து விட்டதால், இனி சினிமாதான் என் காதலன். எட்டு வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நேற்று வந்த காதலனுக்காக அனைத்தையும் இழக்கத் தயாராக இல்லை. இனி என் வாழ்க்கையில் காதல் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார்.