எமியின் ‘டாப்’ தத்துவம்!



'ஐ' பட புரமோஷனுக்காக சென்னை வந்திருந்த எமி ஜாக்சனை சகட்டு மேனிக்கு பத்திரிகையாளர்கள் சந்தித்தார்கள். எமியை டென்ஷன் ஆக்கியது எல்லோரும் மறக்காமல் கேட்ட அந்தக் கேள்விதான். "ஐ படத்துல எங்க ஊரு பொண்ணு மாதிரி அவ்ளோ அழகா இருக்கீங்க. நீங்கபோயி வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு டாப்லெஸ் போஸெல்லாம் கொடுக்கிறீங்களே?" என்ற கேள்விதான். அதற்கு எமி அளித்தது சூடான பதில்...

"முதல்ல ஒரு விஷயத்தை தெளிவாக மனசுல வச்சிக்குங்க. நான் தமிழ்நாட்டு கலாச்சாரத்துல வளர்ந்த பொண்ணு இல்ல. அக்மார்க் லண்டன் பொண்ணு. அங்கு என்னோட புரபஷன் மாடலிங். அங்க மாடலிங்னா நியூடு போஸுக்குக்கூட ரெடியா இருக்கணும். நான் பண்ணியிருக்கிறது டாப்லெஸ்தான். அங்க அப்படித்தான். தமிழ்ப் படத்துல அப்படி நடிக்கிறேனா? இந்தி, தெலுங்கு படத்துல நடிக்கிற அளவுக்குகூட தமிழ்ல கிளாமரா நடிக்கிறதில்ல.

மதராசப் பட்டினத்துல லண்டன் பொண்ணா நடிச்சிருந்தாலும் ஒரு சின்ன கிளாமராவது பண்ணியிருக்கேனா? லண்டன் வேற, சென்னை வேற. அங்க இருந்தா நான் லண்டன் பொண்ணு. இங்க வந்தா நான் இந்தியப் பொண்ணு. இரண்டு கலாச்சாரத்துக்கும் நான் விசுவாசமாவும், உண்மையாகவும் இருப்பேன்" என்கிறார் எமி. பொண்ணு சொல்றதுலே யும் நியாயம் இருக்குல்ல...

-மதி