‘தரணி’ படத்தில் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்திருந்தாலும் கோலிவுட் டைரக்டர்களின் பார்வை தன் பக்கம் விழுந்திருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் அஜய் கிருஷ்ணா.

மரைன் என்ஜினியரான இவர் சினிமா மீது கொண்ட காதலால் கப்பல் வேலைக்கு டாட்டா காட்டிவிட்டு நடிக்க வந்திருக்கிறார். சசிகுமாரின் ‘நாடோடிகள்’ படத்தில் சின்ன கேரக்டரில் வந்தவருக்கு இப்போதுதான் அதிர்ஷ்டக் காற்று வீச ஆரம்பித்துள்ளதாம்.
‘குள்ளநரிக் கூட்டம்’ ஸ்ரீ பாலாஜி இயக்கத்தில் ‘எங்க காட்ல மழை’ படத்தில் பேர் சொல்கிற மாதிரி வைட் ரோல் கிடைத்துள்ளதாம். இது தவிர இன்னொரு படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். சினிமா மீது ஆசை இருந்தாலும் கூத்துப்பட்டறை உட்பட எந்த பள்ளி யிலும் நடிப்பு கற்றுக் கொள்ளவில்லையாம். ‘தரணி’ பட டைரக்டர்தான் சினிமாவைப் பற்றி ஏ டூ இசட் கற்றுக் கொடுத்தாராம்.
அந்த வகையில் இனிமேல்தான் சினிமாவில் இவருடைய டிராவல் இருக்குமாம். ஒரு ஆர்ட்டிஸ்ட்டாக ‘தரணி’யில்தான் தயா ரானேன் என்று சொல்லும் அஜய் கிருஷ்ணாவுக்கு தனுஷ் நடிப்பு பிடிக்குமாம்.
-ரா