தந்தை கமல் எவ்வழியோ அவ்வழியில் ஸ்ருதிஹாசன். தனது ரசிகர் மன்றத்தை திடீரென்று கலைத்து, அதை நற்பணி இயக்கமாக அறிவித்தவர் கமல். இப்போது அவரது ரசிகர்கள் நற்பணியில் ஈடுபடுகின்றனர். அதுபோல் ஸ்ருதியும் இறங்கியுள்ளார்.

தனது ரசிகர்கள் வெறும் ரசிப்புத் தன்மையுடன் மட்டும் இருந்தால் போதாது, அவர்கள் நற்பணி யிலும் ஈடுபட விரும்புகிறார். அப்படி ஈடுபட்டவர்கள், தாங்கள் செய்த நற்பணிகளைப் பற்றி தகுந்த ஆதாரத்துடன் அனுப்பினால், அவர்களுக்கு தன் கையெழுத்து போட்ட புகைப்படத்தையும், நன்றிக் கடிதத்தையும் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார்.
தனக்கு யாரும் இன்ஸ்பிரேஷன் கிடையாது என்கிறார், ‘ஷமிதாப்’ மூலம் அறிமுகமான அக்ஷரா ஹாசன். மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கும் அவர், ஏதாவது அட்வைஸ் தேவைப்பட்டால் மட்டுமே தந்தை கமலுடன் தொடர்புகொள்வாராம். மற்றபடி அக்கா ஸ்ருதிஹாசனிடம் கூட சினிமா சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் கேட்க மாட்டாராம். இந்தியில் நடிக்க அழைப்பு வந்தாலும், தமிழிலும் தன் கொடியைப் பறக்கவிட ஆசைப்படுகிறாராம் அக்ஷரா. அப்ப டைரக்ஷன் பண்ணப் போறதா சொன்னது என்னாச்சு?
- தேவராஜ்