மீனவ நண்பர்கள்!



பிரபுதேவா, ராகவா லாரன்ஸைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் கே.பாஸ்கர் டைரக்டர் அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘காலகட்டம்’. ஒரு மீனவரும், ஒரு டான்ஸ்  மாஸ்டரும் இணை பிரியாத நண்பர்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவர்கள் என்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.

மீனவர் வேடத்தில் பவன்ஸ்ரீ நடித்திருக்கிறார். டான்ஸராக கோவிந்த் நடித்திருக்கிறார். கந்து வட்டி வசூல் பண்ணும் அடாவடி ரவுடியாக ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்திருக்கிறார். ஹீரோக்களின் நண்பர்களாக கிங்காங், கொட்டாச்சி நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு எழிலரசன். இசை மகேந்திரன்.

“இதுவரை என்னை வில்லனாகவும், கேரக்டர் ஆர்டிஸ்ட்டாகவும்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக நடிக்கும் போது கால்ஷீட் கொடுத்தோம், நடித்தோம் என்று போய்விடலாம். ஆனால் ஹீரோவாக நடிக்கும்போது அப்படி இருக்கமுடியாது. நிறைய பொறுப்புகள் இருக்கும். அதை முடிந்தளவுக்கு சரியாக பண்ணியிருக்கிறேன்” என்கிறார் பவன்ஸ்ரீ.

-ரா