குரல் His Mind Voice



அய்யய்யய்யய்யோ! எப்பா சாமிகளா, தாங்கமுடியலடா! அவன் அவன் அடுத்தடுத்து ஹீரோவா நடிச்சு, ஆலிவுட்டுக்கு எந்த பஸ் போகும், ஆஸ்காருக்கு எத்தன டயரு இருக்கும்னு கோட்டர அடிச்சிட்டு குப்புறப் படுத்து திங்க் பண்ணிக்கிட்டு இருக்கான். நான் சோலோ ஹீரோவா ஒரே ஒரு படம் நடிச்சு ஒப்பேத்தியிருக்கேன்.

அது பொறுக்கல. நேர்ல பாக்கும்போது ‘சூப்பர்! இப்பிடியே கன்டினியூ பண்ணுங்க’னு பூஸ்ட் ஊட்டிவிடறானுக. அந்தப்பக்கமா போயி, ‘அடுத்த படத்துக்கெல்லாம் தாங்கமாட்டாம்பா! ஹீரோன்னா சும்மாவா?’னு பொலம்புதுக பொறாம புடிச்ச நாயிக.

இவனுகள எல்லாம் பொளேர்னு செவுள்ல சாத்தி, புழல் ஜெயில்ல போட்டு பூட்டி வைக்கணும். எரும மாட்டுக்கு வெள்ளையடிச்சு பசுமாடா ஆக்கமுடியுமா? எலுமிச்சம்பழத்துக்கு சுண்ணாம்பு அடிச்சு முட்டைனு சொல்லமுடியுமா? அதுபோலத்தான் இவனுகளும். லாரி லாரியா லைபாய் சோப்ப போட்டு குளிக்கவச்சாலும் கூவத்துல மூக்க நொழைச்ச கதிதான். இவனுக மட்டும் ஹீரோ பேனா வாங்கலாம், இவனுக மட்டும் ஹீரோ ஹோன்டா வாங்கலாம். நான் ஹீரோவா ஆகக்கூடாதா? பைத்தியம் புடிச்ச கொரங்க பாம்பு கடிச்சமாதிரி ஏந்தான் இப்பிடிப் பதறுறானுகளோ? சந்தனமும் சந்தானமும் ஒண்ணு.

ரெண்டுமே ஒரச ஒரசத்தான் மணக்கும். எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன், நல்லாக்கேட்டுக்கோங்க நாறப்பய மக்களா? சின்னப்பொட்டியிலேர்ந்து பெரியபொட்டிக்குத் தாவி, இன்னிக்கு கல்லாப்பொட்டிய நெறைக்கிற அளவுக்கு புரடியூசராவும் ஆயிட்டேன். பைத்தியக்காரத்தனமா ஒரு பவர் ஸ்டாரும், இளிச்சவாய்த்தனமா ஒரு சோலார் ஸ்டாரும் காம்பினேஷனா இருக்கறவரைக்கும் சும்மா ஏறி மிதிச்சு எகிறுனேன்னா, எவரெஸ்ட்லதான் போய் நிப்பேன்.