காஜலின் காதல் தோல்வி!



முதல்முறையாக தன் காதலைப் பற்றி திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார் காஜல் அகர்வால். ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், ‘இதுவரை என் காதலைப் பற்றி அதிகம் பேசியதில்லை.

 இப்போது முதல்முறையாக சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நான் மும்பையிலுள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, ஒரு மாணவனை மனப்பூர்வமாக காதலித்தேன். ஆனால், சில மாதங்களிலேயே எங்கள் காதல் முறிந்துவிட்டது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

 அதற்குப் பிறகு யாரையும்  காதலிக்கவில்லை. முழு கவனத்தையும் சினிமா நடிப்பின் மீது மட்டுமே செலுத்தி வருகிறேன். என்னைப் பற்றி அடிக்கடி வதந்தி பரவுகிறது. அதாவது, விரைவில் நான் ஒரு தொழிலதிபரை ரகசிய காதல் திருமணம் செய்யப் போகிறேன் என்று. அப்படி எந்த திட்டமும் என்னிடம் இல்லை’ என்கிறார்.


மலையாள ‘த்ரிஷ்யம்’ வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கு ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கும் மிகப் பெரிய வெற்றிபெற்று, இரு படங்களிலும் நடித்த மீனாவை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்திருக்கிறது. சமீபத்தில் தெலுங்கு ‘த்ரிஷ்யம்’ படத்தின் பிரத்யேகக் காட்சி நடந்தது. படத்தின் இயக்குனர் ஸ்ரீபிரியா, தனது காலத்தில் ஹீரோயின்களாக நடித்தவர்களை அழைத்திருந்தார்.

அவர்கள் அனைவரும், படம் முடிந்த பிறகு எழுந்து நின்று கைதட்டினர். லதாவின் தம்பியும், முன்னாள் நடிகருமான ராஜ்குமாரை காதலித்து மணந்தவர் ஸ்ரீபிரியா. அவரும் தன் மனைவியை பெருமிதத்துடன் பார்த்து ஆச்சரியப்பட்டார். ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ ரீமேக் தமிழில் எடுபடாத நிலையிலும், தெலுங்கில் ‘த்ரிஷ்யம்’ ரீமேக் வெற்றி பெற்றதால், தொடர்ந்து ரீமேக் படம் இயக்க நினைத்துள்ளாராம் ஸ்ரீபிரியா.

 தேவராஜ்