அடுத்து ஒரு அமலாபால்!



இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் ‘பொறியாளன்’. இதன் நாயகன் ஹரீஷ் கல்யாண். ‘கயல்’ படத்தில் அறிமுகமாகும் ஆனந்தி நாயகி. கதை, திரைக்கதை, வசனம் மணிமாறன். ஒளிப்பதிவு வேல்ராஜ். இயக்கம் தாணுகுமார். “சிவில் எஞ்சினியரிங் முடித்த ஒரு இளைஞனின் வாழ்க்கைப் போராட்டம்தான்  கதை.

இந்த கதையின் ஒன் லைனை கேட்கும்போது ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தோட அவுட்லைன் மாதிரி தெரியும். ஆனால் அந்த கதைக்கும் இந்த கதைக்கும் துளியும் ஒற்றுமை இருக்காது. இந்தப் படத்தோட ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கும் அந்த சந்தேகம் இருந்தது. முதன் முறையாக அவரிடம் கதை சொல்ல ஆரம்பித்த போது  ‘வேலையில்லா பட்டதாரி’ கதை மாதிரியே இருக்கே என்றார்.

 முழுக் கதையை கேட்ட பிறகுதான் அவர் ஒளிப்பதிவு செய்ய ஒப்புக் கொண்டார்.  இந்தக்கதைக்கு வேல்ராஜின் ஒளிப்பதிவு பெரிய பலமாக இருக்கும். அதே போல் பெரிய இயக்குனர்கள் படங்களில் பிஸியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் கதை மீதுள்ள நம்பிக்கையில் இசை அமைக்க சம்மதித்தார். ஹரீஷ் கல்யாண் இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம்தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை தரக்கூடிய படமாக இருக்கும்.

ஏன்னா, இது லைம்லைட்டில் இருக்கும் ஹீரோக்கள் பண்ணக்கூடிய ஸ்கிரிப்ட். ஆனால் ஹரீஷ் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்ததால் அவரை வைத்து ஆரம்பித்தேன். அவரும் தன்னுடைய செலக்ஷனை நியாயப்படுத் தும் விதத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். ‘கயல் படத்துல ஆனந்திக்கு என்ன கேரக்டர் என்று தெரியவில்லை.

ஆனால் இதில் கல்லூரி மாணவி வேடம். ஏற்கெனவே நாலைந்து தெலுங்கு படத்தில் நடித்திருப்பதால் அவரிடம் வேலை வாங்குவது எளிதாக இருந்தது. என்னுடைய கணிப்பின்படி ஆனந்தி அடுத்த அமலா பால் போல் ஒரு ரவுண்ட் வருவார்” என்று தன் நாயகிக்கு கியாரண்டி தருகிறார் தாணுகுமார்.

-ரா