தமன்னா வர்றார் ஓடுங்க!



‘யாரோ ஒரு அறிமுகம் இல்லாத நபருடன் இணைந்து வாழ்வதைவிட, ஒருவருடன் நெருங்கிய நட்புடன் பழகினால், அவரது குணநலன்கள் தெரியும். பிறகு அவரையே திருமணம் செய்துகொண்டால், எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமையும்.  காதல் திருமணம்தான் செய்வேன்’ என்று உறுதியாக சொல்கிறார் தமன்னா.

தமிழில் ஏன் அதிகமான படங்களில் நடிப்பதில்லை என்றால், சம்பளம் குறைவாகப் பேசுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார். ‘வீரம்’ படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம், ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் என்கிறார்கள். இப்போது இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் கேட்கிறாராம். இதனால், தமன்னா என்றாலே தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.