மதுரை சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர். செக்காணூரனி ஸ்டுடியோவில் போட்டோகிராபராக இருந்தார். ரிலீசான 'ஞாபகங்கள்’, ‘மயிலு’, ரிலீசாக இருக்கும் ‘அமரா’, ‘மொசக்குட்டி’ படங்களின் இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவனின் தம்பி.சென்னை இளங்கோ பிலிம் வேர்ல்டில் பணியாற்றினார்.
‘மின்சாரக் கனவு’ படத்தில் போட்டோகிராபர் ஜீவனிடம் உதவியாளராக சேர்ந்தார். ‘ஜீன்ஸ்’, ‘நேருக்கு நேர்’, ‘காக்க காக்க’ உள்பட 20 படங்களில் பணியாற்றிய இவர், பிரபு சாலமன் மூலம் ‘கிங்’ படத்தில் தனி போட்டோகிராபர் ஆனார்.
பிரபு சாலமன் விக்ரமிடம் சொல்லி, விக்ரம் தரணியிடம் சிபாரிசு செய்து, ‘தூள்’ படத்தின் போட்டோகிராபராக பணியாற்றிய இவர், கடைசியாக ‘குருவி’யில் வேலை பார்த்தார். பிறகு ‘லாடம்’ மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.ரிலீசான ‘மதுரை சம்பவம்’, ‘மைனா’, ‘தடையறத் தாக்க’, ‘கும்கி’, கன்னடத்தில் ரீமேக்கான ‘போராளி’ படங்களுக்கும்,
ரிலீசாக உள்ள ‘கண்டுபிடி கண்டுபிடி’, ‘தொப்பி’, ‘நிமிர்ந்து நில்’, ‘மான் கராத்தே’ படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபு சாலமனை மானசீக குருவாக மதிக்கிறார்.மனைவி சத்யப்பிரியா, 5வது படிக்கும் மகள் யோகஸ்ரீ, யு.கே.ஜி படிக்கும் மகன் சுமந்த் உள்ளனர். ட்விட்டரில் அமலா பால், ஹன்சிகா போன்றோர் இவரது ஒளிப்பதிவு ஜாலங்கள் குறித்து ஆச்சரியப்பட்டு பலமுறை கமெண்ட் போட்டுள்ளனர்.
- தேவராஜ்