அகடம்இரண்டுமணி நேரம் மூன்று நிமிடங்கள் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம். போலி மருந்து வியாபாரத்தின் மூலம் கொள்ளையடிக்கும் ஒரு கும்பலை ஒரு சாதாரண மனிதன் எப்படித் தீர்த்துக்கட்டுகிறான் என்பதுதான் கதை.

தமிழ், ஸ்ரீ பிரியங்கா இருவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்கள். திரைக்கதை அருமை. ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும் தன் கேமரா ஜாலத்தால் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார் நௌசத் கான். இயக்குநர் முகமது இசாக்குக்கு வாழ்த்துகள்.