கலவரத்தின் உண்மைகள்



‘நண்பன்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்று படத்துக்கு படம் பட்டைய கிளப்பும் சத்யராஜ் நடித்து அடுத்து வெளிவந்துள்ள படம் ‘கலவரம்’. லீட் ரோலில் அஜய் ராகவ், குட்டி, யாசர், தணிகல பரணி, நந்தா, சரவணன், சுஜிபாலா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இசை பைசல். இயக்கம் எஸ்.டி.ரமேஷ் செல்வம். ‘‘இந்தக் கதையை இயக்குநர் ரமேஷ் செல்வம் சொன்ன போது நடிக்கலாமா, வேண்டமா என்கிற மனநிலைதான் இருந்தது.

காரணம், 10 நாட்கள் ஷூட்டிங் போன பிறகு தான் என்னிடம் கதை சொல்ல வந்தார். ஆனால், ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்தது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும், மனிதர்களையும் கண் முன் நிறுத்துவதற்காக அதிக ரிஸ்க் எடுத்தார்.

ஒரு கலவரத்தின் ஆரம்ப நிலையையும் கலவரத்தின் உண்மை முகங்களையும் பளிச் என்று சொல்லியிருப்பதால் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எனக்கு முழு மன நிறைவை அளித்துள்ளது...’’ என்கிறார் சத்யராஜ்.

- எஸ்