பிரணீதாவை அலற வைத்த முத்தம்



அப்பா டாக்டர், அம்மா டாக்டர். பிறகு என்ன, இவரும் டாக்டராக வேண்டும் என்று சின்சியராகப் படித்தார். ஆனால், மருத்துவமனைக்குச் சென்று டாக்டராகப் பணியாற்றவில்லை. பதிலாக, மாடலிங் செய்தார். அதன் மூலம் பிரபலமானதைத் தொடர்ந்து, இப்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 'மோஸ்ட் வான்டட்’ நடிகையாகி விட்டார். மொழிக்கு ஒரு பெயரில் நடித்து வரும் ஹீரோயின்களுக்கு மத்தியில், எல்லா மொழிகளிலும் ‘பிரணீதா’ என்ற பெயரிலேயே நடிக்கிறார்.

தமிழில் அருள் நிதியின் ஜோடியாக ‘உதயன்’, கார்த்தியின் ஜோடியாக ‘சகுனி’ படங்களில் மட்டுமே நடித்தார். என்றாலும், அதிக படங்களில் நடித்த நடிகைக்கு கிடைக்கும் வரவேற்பும், புகழும் கிடைத்தது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் பிரணீதாவின் மைனஸ் பாயின்ட். இப்போது கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் உருவாகும் இந்தி ‘கோல்மால் 3’ படத்தின் ரீமேக்கிலும் நடிக்கிறார். இதில் மோகன் பாபுவுக்கு ரவீணா டாண்டன், விஷ்ணு மஞ்சுவுக்கு பிரணீதா, மனோஜ் மஞ்சுவுக்கு ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர்.

மலையாளத்தில் ரிலீசான ‘சப்பாகுரிசு’, தமிழில் ‘புலிவால்’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடிக்க பிரணீதாவிடம் பேசினார்கள். என்றாலும், உதடுடன் உதடு இணைத்து முத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டபோது, உடனடியாக நடிக்க மறுத்து விட்டாராம். இப்போது பிரணீதாவுக்குப் பதிலாக ஓவியா நடித்துள்ளார். ஆனால், இந்த ‘லிப்-லாக்’ காட்சி பற்றி வெளியே சொல்லாமல் ரகசியம் காக்கிறது படக்குழு.

‘இலைமறை காயாக கவர்ச்சி காட்டுவேன். ஆனால், ஓவர் கிளாமர் உடம்புக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் ஆகாது’ என்று சொல்லும் பிரணீதா, நீச்சல் உடை அணியவும் முகம் சுளிக்கிறாராம். இதனால்தான் அவருக்குக் கிடைக்க வேண்டிய பல படங்கள் சமந்தா, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன்,

காஜல் அகர்வால் ஆகியோருக்குச் சென்றுவிடு கிறதாம். இதையறிந்து ஆவேசப்பட்டு கத்துவார் என்று பார்த்தால், ரொம்ப கூலாக இருக்கிறார் பிரணீதா. காரணம், அவருக்கு சமந்தா, ஹன்சிகா போன்றோர் நெருங்கிய தோழிகளாக இருக்கிறார்கள். தவிர, பிந்து மாதவியும் பிரணீதாவுக்கு ஆருயிர்த்தோழி என்பதால், தன்னால் நடிக்க முடியாத சில படங்களை அந்த நடிகைகளின் பக்கம் தள்ளிவிடுகிறாராம்.

- தேவராஜ்