தமிழுக்கு வரும் நீலப்பட நடிகை



‘என்ன நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ என்பது கீதை மொழி என்றால் ‘எது நடக்கக் கூடாதோ அது நன்றாகவே நடந்தது’ என்பது சினிமா மொழி. அப்படித்தான் ஆகியிருக்கிறது சன்னி லியோனின் தமிழ் சினிமா வருகை. சன்னி லியோன் பற்றியோ, அவர் நடித்த படங்கள் பற்றியோ நமக்கு எந்த அக்கறையோ கவலையே கிடையாது. ஆனால், அவரின் வருகை பற்றி அக்கறையோ கவலையோ கொள்ளாமல் இருக்க முடியாது.

போர்னோகிராபி என்று டீசன்டாக அழைக்கப்படும் நீலப் படங்களில் நடிப்பவர் சன்னி லியோன். இவர் நடித்த படங்கள் அந்த வகை படங்களில் டாப் டென்னில் இருக்கிறது. அவரே சுமார் 40 அந்த மாதிரி படங்களை டைரக்ட் செய்திருக்கிறார் என்பது அந்த துறையில் அவருக்கு இருக்கும் தெளிவையும், அறிவையும் காட்டுகிறது.

 இந்திப் படத்தின் மூலம் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். அவரின் பூர்வாசிரமம் இந்தியா என்பது அவரது முக்கிய தகுதி. தமிழ்ப் பட ஹீரோ பரத்திற்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவுக்கும் நெருக்கமாகி இருக்கிறார். இப்போது தாய்லாந்தில் இன்னொரு தமிழ் ஹீரோ ஜெய்யுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

அவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்கவும், ஆட வைக்கவும் தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஆசை துளிர்விட்டிருக்கிறது. நடிப்பு, ஆட்டத்தைத் தாண்டி அவரை நெருங்க முடியாது என்பதைத்தான் சமீபகாலமாக அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது. ‘நான் நடித்துள்ள படத்தை மனதில் வைத்துக்கொண்டு யாரும் என்னை அணுகாதீர்கள்’ என்று சொல்லாமல் சொல்லி வருகிறார். நான்கைந்து செகரட்டரிகள், தன்னைச் சுற்றி எப்போதும்  பாதுகாவலர்கள் என்று வலம் வருகிறார்.

இணையதளத்தில் கிடைக்கும் சன்னியின் நீலப் படங்களை தமிழகத்தில் இணையத்தை பயன்படுத்தும் குறைந்த சதகிவித இளைய தலைமுறையினரே அறிவார்கள். அவர் இந்திக்கு வந்த பிறகு இந்திய பெருங்குடி மக்கள் இணையத்தில் அவரது படங்களை தேடித்தேடி பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் கில்மா சைட்டுகள் சன்னியின் படத்தை முதல் பக்க படமாகப் போட்டு, ‘கிளிக் ஹியர். சீ த சன்னி ஃபுல் மூவி’ என்று அழைத்துக் கொண்டிருக்கிறது. சன்னியின் அந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவருக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் நடக்கிற வியாபாரம்.

தமிழ்நாட்டுக்கு சன்னி அறிமுகமான பிறகு தமிழ் இளைஞர்கள் இணையதளங்களில் அவரது படத்தை தேடித் தேடி பார்க்கப் போகிறார்கள். சினிமாவில் படு கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகூட இணையத்தில் டர்க்கி துண்டு அணிந்து குளிக்கும் ஒரு பிட்டு நெட்டில் லீக்கானால் லட்சக்கணக்கில் பார்த்து கமெண்ட் போடுகிறவர்கள் நம் மக்கள்.

திரையில் பார்க்கும் ஒரு நடிகையை நேரில் பார்க்கும்போது ஒரு பரவசம் ஏற்படுவது இயற்கை. அந்த வகையில் சன்னியை பெரிய திரையில் பார்த்து விட்டு கணினித்திரையை நோக்கி இளைஞர்கள் செல்லப்போகிறார்கள். போர்னோகிராபி என்ற வார்த்தையை அறியாத வீடுகளுக்குள்ளும் அந்த வார்த்தை புழங்கப்போகிறது.

மறைத்து வைத்து மஞ்சள் பத்திரிகை படித்த காலத்தை மாற்றியது மலையாள பிட்டு படங்கள். அதையும் பெட்டிக்குள் அனுப்பியது இணைய தளங்கள். இப்போது அடுத்த கட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. இந்தியாவிலும் போர்னோகிராபி நடிகைகள் தோன்றலாம், படங்களும் வெளிப்படையாக உருவாலாம். இந்திய சினிமா உலகத் தரத்துக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்களே... அது இதுதானோ..?டெயில் பீஸ்: பொதுநலன் கருதி சன்னி லியோனின் புகைப் படங்களை இங்கு பிரசுரிக்கவில்லை.

 மீரான்