5 பன்ச்சு





கோவையில் 8 முதல் 10ம் வகுப்பு வரை எம்.ஜி.ஆரின் நேரடி உதவியில் படித்தார். பிறகு பிளஸ் 2 முடித்தார். நடிப்பு ஆர்வம் காரணமாக கே.பாக்யராஜை சந்தித்தார். ‘முந்தானை முடிச்சு’ மூலம் அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எல்லா மொழியிலும் சொந்தக்குரலில் பேசுவார். நடிப்பதற்கு முன், அந்த மொழியை ஓரளவாவது கற்றுக்கொள்வார்.

நான்கு அண்ணன்கள், ஒரு அக்கா உள்ளனர். இவர் கடைக்குட்டி. ஏழை மாணவர்கள் படிக்க நிறைய உதவிகள் செய்கிறார். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் உள்ளவர்.

சுயசிந்தனையும், மரியாதையும் உள்ளவர். எனவே, திருமண வாழ்க்கையை விரும்பவில்லை.

எவ்வளவு பெரிய வசனம் கொடுத்தாலும், ஒரே டேக்கில் ‘ப்பூ’ என்று ஊதித்தள்ளுவார். கமல்ஹாசனுடன் நடித்த ‘சதிலீலாவதி’யில் மட்டுமே கதாநாயகி. மற்ற படங்களில் எல்லாம் ‘காமெடி நாயகி’.
- தேவராஜ்