நடிகர் SMS அனுப்பினால் ஓடி வரும் நடிகை




ரம்ஜான் தினத்தில் ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரசு’டன் அக்ஷய் குமார் நடித்த ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை 2 ரிலீசாக இருந்தது. இப்பட தயாரிப்பாளரான ஏக்தா கபூரின் அப்பா ஜிதேந்திராவை சந்தித்த ஷாருக், ‘உங்க படத்தை தள்ளி வையுங்க’ என கோரினார்.

ஜிதேந்திராவும் ஓகே சொல்லிவிட்டார். அப்பாவின் இந்த முடிவால் ஏக்தா கோபமாக இருக்கிறாராம்.

‘அஜய் தேவ்கன் எனக்கு நல்ல நண்பர். என் படத்தில் நடி என அவர் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். உடனே அவருக்காக ஓடி வந்து கால்ஷீட் தருவேன்’ என்கிறார் சோனாக்ஷி சின்ஹா.

பகையை மறந்து ஷாருக்கானுடன் திடீரென இணைந்துவிட்டார் சல்மான் கான். இதையடுத்து ‘சென்னை எக்ஸ் பிரஸ்’ படத்தின் சிறப்புக் காட்சியை தனக்கு திரையிடுமாறு அப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியிடம் கேட்டிருக்கிறார் சல்லு பாய்.

இந்த¤ப் படங்களைத் தொடர்ந்து மினிமம் பட்ஜெட்டில் மராத்தி மற்றும் பஞ்சாபி படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் அக்ஷய் குமார். விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கிலும் படங்களைத் தயாரிக்கும் ஐடியா அவருக்கு உள்ளதாம்.

பர்ஹா கான் இயக்கும் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் ஷாருக்குடன் அபிஷேக் பச்சன், பிருத்விராஜ் நடிக்க உள்ளனர். இன்னும் ஒரு ஹீரோவாக ஜான் ஆப்ரஹாமும் சமீபத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஹீரோயின்தான் இன்னும் கிடைக்கவில்லையாம்.

அனில் கபூரின் மகனும் சோனம் கபூரின் தம்பியுமான ஹர்ஷ்வர்தன் ஹீரோவாக அடுத்த ஆண்டு அறிமுகம் ஆகிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் ‘மிர்ஸா சாஹிபா’ படத்தில் அவர் நடிக்கிறார்.
- ஜியா