ஒரு ஆணை இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள்





‘ஆசாமி’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஆண்டாள் ரமேஷ் இயக்கும் படம் ‘இன்னாருக்கு இன்னாரென்று’. புதுமுகம் சிலம்பரசன் இதன் நாயகன். புதுமுகங்கள் ஸ்டெப்பி, அஞ்சனா நாயகிகள். இயக்குநர்கள் சந்தானபாரதி, அனுமோகன், விஜய் கிருஷ்ணராஜ் என பழகிய முகங்களும் படத்தில் உண்டாம்.



ஒரே சமயத்தில் இரண்டு பெண்கள் ஹீரோவைக் காதலிக்கிறார்கள். இந்த இருவரில் யாரை ஹீரோ காதலிக்கிறார் என்பது க்ளைமாக்ஸ். படத்தின் பலமே பாடல்கள் எனுமளவுக்கு அனைத்துப் பாடல்களையும் தனித்துவமாகக் கொடுத்துள்ளாராம் இசையமைப்பாளர் வசந்த மணி. புதுமுக நாயகிகள் இருவரும் முதல் படம் என்கிற சுவடு தெரியாத அளவுக்கு முத்தக் காட்சி உட்பட அனைத்துக் காட்சிகளிலும் அமர்க்களப்படுத்தி இருக்கிறார்களாம். படம் முழுக்க வாய்விட்டுச் சிரிக்க வைக்குமளவுக்கு காமெடி காட்சிகள் இருந்தாலும் கடைசி ஐந்து நிமிடங்கள் ரசிகர்களை அழவைக்கும் என்கிறார்கள்.
- ரா