5 பன்ச்சு : சீனு ராமசாமி





சினிமா ஆசையில் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த சீனிவாசன், முதலில் பாலு மகேந்திராவிடமும், பிறகு சீமானிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

‘கூடல் நகர்’ மூலம் இயக்குநராகி, சீனு ராமசாமியாக (தாத்தாவின் பெயரை இணைத்து) மாறினார். ‘தென்மேற்குப் பருவக் காற்று’க்கு தேசிய விருது கிடைத்தது. பிறகு ‘நீர்ப் பறவை’யைப் பறக்க விட்டார்.

‘காற்றால் நடந்தேன்’ என்ற புதுக்கவிதை நூல் வெளியிட்டுள்ளார். அடுத்த கவிதை நூல் ரெடி. இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்கவும், பேசவும் ஆர்வம் காட்டுவார்.

கிருபானந்த வாரியாரின் சீடன். சிறுவயதில் அவரிடம் ஆசி பெற்றவர். வாரியாரின் சொற்பொழிவு சி.டிகளைக் கேட்டு ரசிப்பார். அவரது புத்தகங்களையும் சேகரித்து வருகிறார்.

மறைந்த ஷோபாவின் தீவிர ரசிகர். ஏவிஎம் சுடுகாட்டில் இருக்கும் அவரது கல்லறைக்குச் சென்று பூங்கொத்து வைத்து வணங்குவார். கல்லறையைப் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளார்.
- தேவராஜ்