திரையுலகை கலக்கும் 22 காதல் ஜோடிகள்





‘மகனே என் மருமகனே’ படத்துக்குப் பிறகு டைரக்ஷன் செய்வதை நிறுத்தி வைத்திருந்த டி.பி.கஜேந்திரன், பல படங்களில் காமெடி செய்தார். இப்போது மீண்டும் படம் இயக்க ஆயத்தமாகி விட்டார். இது முழுநீள காமெடி சப்ஜெக்ட். பல காமெடி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘ஆசை தோசை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘மைனா’வில் வித்தியாசமாக நடித்து வில்லியாக மாறிய சூசன், பிறகு ‘நர்த்தகி’ உள்பட சில படங்களில் நடித்தார். இப்போது ‘பேச்சியக்கா மருமகன்’ படத்தில் நடித்துள்ள அவர், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தனிஷ் ஹீரோவாக நடிக்கும் ‘தேவதாஸ் ஸ்டைலு மார்ச்சாடு’ படத்தில், இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக சூசன் நடிக்கிறார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங்கிலும், கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பிரியாணி சமைத்து, யூனிட்டாருக்கு தன் கையால் பரிமாறுவது அஜீத்தின் வழக்கம். இதை அந்தந்த படத்தில் நடிக்கும் கலைஞர்கள் சொல்வார்கள். ஐதராபாத்தில் ‘சிறுத்தை’ சிவா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அஜீத், இதில் நடிக்கும் பல கலைஞர்களுக்கு பொங்கல் சமைத்து பரிமாறியுள்ளார். அவரே பரிமாறிய பொங்கல் செம டேஸ்ட்டாக இருந்ததாக, அஜீத் தம்பியாக வரும் விதார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் மனோசித்ரா சொன்னார்.

ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் அந்தஸ்துக்கு வந்துள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், தமிழ் மற்றும் தெலுங்கில் சேரன் தயாரித்து இயக்கும் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்துக்கு சம்பளமே பேசவில்லையாம். ‘நான் உங்க தீவிர ரசிகன். முதல்ல நீங்க படத்தை ஆரம்பிங்க. என் சம்பளத்தை பிறகு பார்த்துக்கலாம்!’ என்று, அதிக ஈடுபாட்டுடன் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துக் கொடுத்ததாக நன்றிப்பெருக்குடன் சொன்னார் சேரன்.



பிரபு - கார்த்திக் நடித்த ‘தை பொறந்தாச்சு’, பிரபு நடித்த ‘சூப்பர் குடும்பம்’, விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்’ படங்களை இயக்கியவர் ஆர்.கே.கலைமணி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதி இயக்கும் படத்துக்கு ‘ஆப்பிள் பெண்ணே’ என்று பெயரிட்டுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ ஸ்ரீவத்சன் ஹீரோ. மலையாள புதுமுகம் ஹீரோயின். முக்கிய வேடங்களில் தம்பி ராமய்யா, ரோஜா நடிக்கின்றனர்.

தன் மகள் சரண்யாவை வைத்து இயக்கிய ‘பாரிஜாதம்’, தன் மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய ‘சித்து பிளஸ் 2’ படங்களின் மூலம் வெற்றிக்கனியைப் பறிக்க இயலாத நிலையில், பழைய பாக்யராஜை ரசிகர்கள் முன் நிலைநிறுத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும் கே.பாக்யராஜ், நவீன அரசியலை நையாண்டி செய்யும் ஒரு அதிரடி காமெடி கதையை இயக்குகிறார். இதற்கு ‘துணை முதல்வர் / அன்னப்போஸ்ட்’ என்று பெயரிட்டுள்ளார்.

கன்னட ஹீரோ விஜய்யைக் காதலித்து, அவரை ரகசிய திருமணம் செய்ததாக வந்த தகவல்களை பெங்களூரில் மறுத்துள்ளார் சுபா புஞ்சா. தமிழில் ‘மச்சி’, ‘சுட்ட பழம்’ போன்ற படங்களில் நடித்துள்ள இவர், கோலிவுட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கே சென்றுவிட்டார். அங்கு விஜய்யுடன் சில படங்களில் நடித்தார். காதல் அது இதுவென்று கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் அதை மறுத்து வந்தனர். ஒருகட்டத்தில், ‘இனி விஜய்யுடன் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன்’ என்று சுபா அறிவித்தார். அப்போதும் கிசுகிசு ஓயவில்லை. இந்நிலையில், ஒரு கன்னடப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுபா, யாருடனும் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்.



‘வன யுத்தம்’, ‘சென்னையில் ஒருநாள்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர், அஜயன் பாலா. சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்போது அவர் இயக்கும் முதல் படத்துக்கான கதை விவாதம் நடைபெறுகிறது. அந்தப் படத்துக்கு ‘மைலாஞ்சி’ என்று பெயரிட்டுள்ளார். இயக்குநர் விஜய் தயாரிக்கிறார். ஆகஸ்டில் ஷூட்டிங் தொடங்குகிறது.

1) சிம்பு, ஹன்சிகா. 2) சித்தார்த், சமந்தா. 3) ஆர்யா, நயன்தாரா. 4) ரம்யா நம்பீசன், உன்னி முகுந்தன். 5) ரீமா கல்லிங்கல், ஆஷிக் அபு. 6) ராணா, த்ரிஷா. 7) இயக்குநர் விஜய், அமலா பால். 8) அதர்வா, ஜனனி அய்யர். 9) கிரிக்கெட் வீரரும், நடிகருமான ஒருவருடன் பாவனா. 10) அருந்ததி, ரத்தேஷ். 11) நகுல், ‘சுப்ரமணியபுரம்’ சுவாதி. 12) லகுபரன், சுவாதி. 13) ஜெய், அஞ்சலி. 14) டாப்ஸி, மஹத். 15) ஆண்ட்ரியா, அனிரூத். 16) ஆண்ட்ரியா, பஹத் பாசில். 17) நடிகரும் போட்டோகிராபருமான ஒருவருடன் ரிச்சா கங்கோபாத்யாயா. 18) சோனு சூட், சார்மி. 19) இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் தமன்னா. 20) அனன்யா, ஆஞ்சநேயன். 21) தனது ஆண் நண்பருடன் நமீதா. 22) தமிழில் இரு இளம் நடிகர்களுடனும், மலையாளத்தில் ‘சட்டக்காரி’ ரீமேக் ஹீரோவுடனும் பூர்ணா.

இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்கள் திரையுலக வட்டாரத்தில் பரவியது... பரவி வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட சிலர் மறுப்பு சொல்லிவிட்டனர். என்றாலும், அவ்வப்போது அந்த கிசுகிசுக்கள் மீண்டும் உயிர்பெற்று வருகின்றன. இந்த லிஸ்ட் மேலும் நீண்டுகொண்டே போகிறது. என்றாலும், என்ன நடந்ததோ அதை மட்டும் சொல்லியிருக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.
- தேவராஜ்