சூது கவ்வும் : விமர்சனம்





காதல் இல்லாமல் வித்தியாசமான கோணத்தில் கதை சொன்ன காரணத்துக்காகவே இயக்குநர் நலன் குமரசாமிக்கு வாழ்த்துகள் சொல்லலாம். தனிக்கட்டையாக இருந்தாலும் திருடி பிழைப்பு நடத்துகிறார் விஜய் சேதுபதி. இவருடன் வேலை வெட்டி இல்லாத மூன்று இளைஞர்கள் சேருகிறார்கள். அதன் பிறகு நடக்கும் காட்சிகள் அனைத்தும் அதகளம்.

நரைத்த தாடி, தடித்த உருவம் என்று கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி. புதிதாக திருட்டுத் தொழிலுக்கு வருபவர்களிடம் அவர் வகுப்பு எடுக்கும்போது தியேட்டரே அதிர்கிறது. சஞ்சிதாவின் கேரக்டரை பக்காவாக வடிவமைத்த இயக்குநருக்கு பாராட்டு. எம்.எஸ்.பாஸ்கர், தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் யோக் ஜெப்பி, அமைச்சர் மகனாக வரும் கருணாகரன், அந்த மூன்று நண்பர்கள் என அனைவரும் பட்டையை கிளப்புகிறார்கள். சந்தோஷ் நாராயணனின் இசையும், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.